கொங்குநாடு தனி மாநிலக் கோரிக்கை வலுக்கும்- பெஸ்ட் ராமசாமி
கோவை: மத்திய, மாநில அரசுகள் கொங்கு மண்டலத்தைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தால் தனி மாநிலக் கோரிக்கை மேலும் வலுக்கும் என்று கொங்கு நாடு முன்னேற்றக் கழகத் தலைவர் பெஸ்ட் ராமசாமி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தை இரண்டாக பிரித்து கொங்குநாட்டை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்பதல்ல எங்கள் கோரிக்கை. இதனை புரிந்துகொள்பவர்களின் எண்ணத்தில்தான் குற்றம் உள்ளது.
எந்தக் காலத்திலும் இந்திய தேசத்தின் இறையாண்மைக்கு குந்தகம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கொங்குநாடு முன்னேற்ற கழகம் உறுதியாக உள்ளது.
பாரதத்தில் உள்ள எந்த ஒரு குடிமக்களையும் நாங்கள் பிரித்து பார்ப்பதில்லை. இதற்கு உதாரணமாக இப்போது கொங்கு நாட்டிற்கு பல்வேறு மாநிலங்களில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் வேலைவாய்ப்பு தேடி வருகிறார்கள்.
அவர்களை அரவணைத்து நல்ல வேலை வாய்ப்புகளையும், பாதுகாப்பையும் தந்து கொண்டிருக்கிறது. மத்திய அரசின்கீழ் மற்ற மாநிலங்களில் உள்ளது போல் கொங்குநாட்டையும் நிர்வாக வசதிக்காக பிரித்து தாருங்கள் என்றுதான் கேட்கிறோம்.
கொங்கு மண்டலத்தில் உள்ள அனைத்து சமுதாயத்தை சேர்ந்த மக்களின் அயராது உழைப்பினால் தமிழக அரசுக்கு 48 சதவீதம் வரி கிடைக்கின்றது.
ஆனாலும், கொங்குநாட்டை தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசும், மாநில அரசும் பாராமுகமாக உள்ளது. கொங்கு மண்டலத்தில் எந்த ஒரு அடிப்படை வசதிகளோ, கட்டமைப்பு வசதிகளோ முறையாக இல்லை.
கொங்குநாட்டிற்கு என்று தனி அரசு இருந்திருந்தால் தற்போது உள்ள சாய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கண்டு இருப்போம். இந்த அளவு பெரியஅளவில் வெடித்திருக்காது.
இந்த சாயப்பட்டறை பிரச்சனையால், பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான தீர்வுகளை மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து புறக்கணிக்குமானால் எங்களது கொங்குநாடு தனிமாநில கோரிக்கை பன்மடங்காக வலுப்பெறும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications