புத்தாண்டு - நெல்லையில் ரூ.1.50 கோடி மது விற்பனை
நெல்லை: நெல்லையில் புத்தாண்டை முன்னிட்டு ரூ.1.50 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. மார்கழி குளிர் வாட்டி எடுப்பதால் குடிமகன்கள் பலர் பீரை மறந்து பிராந்திக்கு தாவியுள்ளனர்.
2010 புத்தாணடு தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. புத்தாண்டு பிறப்பு என்றால் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்றாகி விட்டது. மது இல்லாமல் புத்தாண்டு கொண்டாட்டமா என்று எண்ணும் வகையில் புத்தாண்டை முன்னி்ட்டு மது விற்பனையும் சக்கை போடு போட்டுள்ளது.
இரவில் புத்தாண்டு பிறந்தாலும் பல இடங்களில் சீரியல் அலங்காரங்கள், ஆட்டம், பாட்டத்தால் பகல் போலவே காட்சியளித்தது. ஒரு சில பார்களில் இன்னிசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புத்தாண்டை குடிமகன்கள் குதூகலத்துடன் கொண்டாட நெல்லை மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகம் கூடுதல் சரக்குகளை கொள்முதல் செய்து இருப்பு வைத்திருந்தது. இந்த சரக்குகள் கடந்த வாரமே கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு ஸ்டாக் வைக்கப்பட்டிருந்தது.
புத்தாண்டு ஒருநாள் மட்டும் நெல்லை மாவட்டத்தில் ரூ.1.50 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. வழக்கமாக இது போன்ற கொண்டாடங்களில் பீர் விற்பனை அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது மார்கழி மாதம் அதிக குளிர் என்பதால் பீரை மறந்து பலர் பிராந்தியை ருசித்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் 1400 பெட்டிகள் பீர் ரகங்களும், 4 ஆயிரம் பெட்டிகள் பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் போன்றவையும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இந்த ஒரு நாளில் மட்டும் ரூ.11 லட்சத்து பீர் ரகங்களும், ரூ. 1 கோடியே 30 லட்சத்திற்கு பிராந்தி வகைகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
புத்தாண்டிற்கு முந்தைய நாள் நெல்லை மாவட்டத்தில் 900 பெட்டிகள் பீர் வகைகளும், பிராந்தி, விஸ்கி போன்ற தாயாரிப்புகள் 3 ஆயிரத்து 300 பெட்டிகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.1 கோடி ஆகும்.
இந்த இரண்டு நாட்களிலும் ரூ.2.50 கோடிக்கு மதுபான வகைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications