பெண்ணாகரத்தில் 28 ஆயிரம் வாக்களர் பெயர்கள் மாயம்- பாமக புகார்
தர்மபுரி: இடைத்தேர்தல் நடைபெற உள்ள பெண்ணாகரம் சட்டசபை தொகுதியில் 28 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்று பா.ம.க மாநில துணை பொதுச் செயலாளர் சரவணன் புகார் கூறியுள்ளார்.
பா.ம.க மாநில துணை பொதுச் செயலாளர் சரவணன், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளார்.
அதில், பெண்ணாகரத்தில் தேர்தல் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதில், டி.எஸ்.பி மற்றும் தாசில்தார் பாரபட்சம் காட்டுகின்றனர்.
அதிகாரிகள் ஆளுங்கட்சியினருக்கு சாதகமாக செயல்படுகின்றனர். மேலும், பா.ம.க.வினர் மீது பொய் வழக்கு போட்டுகின்றனர். எனவே, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண்ணாகரம் தொகுதியில், 2006ம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில், ஆண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 3,567 பேரும், பெண் வாக்காளர்கள் ஒரு லட்சத்து 4,424 பேரும் என, மொத்தம் , இரண்டு லட்சத்து 7,991 பேர் இருந்தனர்.
ஆனால், கடந்த ஆண்டு வெளியான வாக்காளர் பட்டியலில், ஆண் வாக்காளர்கள் 91 ஆயிரத்து 979 பேரும், பெண் வாக்காளர்கள் 87 ஆயிரத்து 557 பேரும் என, ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 536 பேர் மட்டும் இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிலரது சூழ்ச்சியால் வாக்காளர் பட்டியலில், 28 ஆயிரத்து 455 வாக்காளர்கள் பெயர் மாயமாகி உள்ளன. எனவே, இதற்கு காரணமானவர்களை கண்டறிந்து அவர்கள் மீது உரிய நவடிக்கை எடுக்க வேண்டும்' என்று புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications