கோவில் காவலாளியைக் கொன்று விட்டு அம்மன் நகை கொள்ளை
ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே கோவில் காவலாளியைக் கொலை செய்து விட்டு அம்மன் நகை, உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுங்குவார் சத்திரம், திருமங்கலம் கண்டிகையில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. இங்கு காவலாளியாக சுப்பிரமணி (40) என்பவர் வேலை பார்த்து வந்தார். இதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. வீடும் கோவிலுக்கு அருகிலேயே உள்ளது.
தினசரி இரவு கோவிலுக்குள் படுத்துத் தூங்குவார். நேற்றும் இரவில் படுக்கப் போய் விட்டார். அப்போது நள்ளிரவில் திருடர்கள் உள்ளே புகுந்துள்ளனர்.
சுப்பிரமணி உள்ளே இருப்பதை அறியாமல் உண்டியலை உடைக்க ஆரம்பித்தனர். சத்தம் கேட்டு எழுந்த சுப்பிரமணி சத்தம் போட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த திருடர்கள், சுப்பிரமணியை இரும்புக் கம்பியால் தாக்கினர். இதில், சுப்பிரமணியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பின்னர் உண்டியலில் இருந்த பணத்தையும், அம்மன் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க நகைகளையும் அபகரித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இன்று காலை போலீஸாருக்குத் தகவல் போய் விரைந்து வந்தனர். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
இந்த துணிகர கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications