கணவனை இழந்த தாய் 4 குழந்தைகளுடன் தற்கொலை முயற்சி
நெல்லை: கணவர் இறந்த துக்கத்தில் 4 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து வி்ட்டு தானும் விஷம் குடித்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம அருகே உள்ள ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் தர்மராஜ். அப்பகுதியில் உள்ள ஹோட்டல் ஓன்றில் புரோட்டா மாஸ்டராக பணி புரிந்தார். இவர் நோய் காரணமாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இறந்தார்.
கணவன் இறந்தபின்னர் ஆதரிக்க யாருமின்றி தர்மராஜின் மனைவி மனோன்மணி 5 குழந்தைகளுடன் கஷ்டப்பட்டு வந்தார். இதனால், மனமுடைந்த மனோன்மணி குழந்தைகளோடு தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார்.
நேற்று தனது குழந்தைகளுக்கு எலி மருந்தை பாலில் கலந்து கொடுத்துவிட்டு, தானும் குடித்தார். தனது 5 குழந்தைகளில் 4 பேருக்கு மட்டும் மனோன்மணி விஷம் கொடுத்தார். ஐந்தாவது குழந்தை பிறந்து எட்டுமாதமே ஆவதால் அதை கொல்ல மனமில்லாமல் விட்டுவிட்டார்.
விஷமருந்திய சில நிமிடங்களில் இதில் அனைவரும் மயங்கி விழுந்தனர். குழந்தை சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் வந்து பார்த்துவிட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனைவரையும் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications