விதர்பா தனி மாநிலம் கோரி நாக்பூரில் காங்கிரசார் போராட்டம்
நாக்பூர்: மஹாராஷ்டிராவி்ல் உள்ள விதர்பா பகுதியை தனி மாநிலமாக அறிவிக்கக்கோரி நாக்பூரில் முன்னாள் மத்திய அமைச்சர் தலைமையில் காங்கிரசார் போராட்டம் நடத்தினர்.
நாக்பூர், அமராவதி உள்ளிட்ட விதர்பா பகுதியை மஹாராஷ்டிராவில் இருந்து பிரித்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை இருந்து வருகிறது. இது மகாராஷ்டிரத்தின் மொத்த பரப்பளவில் 31 சதவீத பகுதியாகும். அம் மாநில மக்கள் தொகையில் 21 சதவீதம் பேர் இங்கு வசிக்கின்றனர்.
1950களில் இந்தியாவின் மத்திய மாகாணத்தின் ஒரு பகுதியாக விளங்கியது. பெரும்பாலும் இந்தி பேசும் மக்களைக் கொண்ட இந்தப் பகுதி அப்போதைய பிரதமர் நேருவால் மகாராஷ்டிரத்துடன் இணைக்கப்பட்டது.
இந்நிலையில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த தனி விதர்பா மாநில விவகாரம் தனி தெலுங்கானா போராட்டம் துவங்கியதை அடுத்து மீண்டும் உயிர் பெற்றது.
கடந்த மாதத்தில் அவ்வப்போது ரயில் மறியல் சாலை மறியல் போன்ற போராட்டங்கள் நடந்துவந்தன.
இந்நிலையில் நேற்று நாக்பூரில் உள்ள சிதாபுல்டி பகுதியில் காங்கரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான விலாஸ் முட்டம்வர் தலைமையில் ஏராளமானோர் ஒன்றுகூடி இன்று நாள் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விதர்பா தொழிலங்கள் சங்கம், விதர்பா பொருளாதார கவுன்சில் மற்றும் நாக்பூர் வர்த்தக சபை ஆகிய அமைப்புகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்தன.
விதர்பா பகுதியை தனிமாநிலமாக அறிவிக்க வேண்டிய அவசியங்களை குறிப்பிட்டு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு விரிவான கடிதம் எழுதியிருப்பதாக முட்டம்வர் தெரிவித்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications