ஆஸி. மேலும் ஒரு இந்தியர் கொலை-பாதி எரிக்கப்பட்ட உடல் மீட்பு

Subscribe to Oneindia Tamil

Australia
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் பாதி எரிக்கப்பட்ட நிலையில் 25 வயது இந்திய இளைஞரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் கடந்த சனிக்கிழமை, பஞ்சாபைச் சேர்ந்த நிதின் கார்க் (25) என்ற இந்திய வாலிபர் குத்திக் கொல்லப்பட்டார். ஆஸ்திரேலியாவில் இந்தியர் ஒருவர் கொல்லப்படுவது, இதுவே முதல்முறை ஆகும்.

இந் நிலையில், ஆஸ்திரேலியாவில் மேலும் ஒரு இந்தியர் கொல்லப்பட்டுள்ளார்.

நியூ சவுத்வேல் மாகாணத்தில் கிரிப்பித் என்ற இடத்தில் சாலையோரத்தில் பாதி எரிக்கப்பட்ட நிலையில் இந்த வாலிபரின் உடல் கிடந்தது. கடந்த 1ம் தேதியே இந்த உடல் மீட்கப்பட்டுவிட்டாலும் இப்போது தான் அது இந்தியரின் உடல் என்று தெரியவந்துள்ளது.

கடந்த டிசம்பர் 27ம் தேதி பஞ்சாப்பைச் சேர்ந்த ரஞ்சோத் சிங் என்ற வாலிபர் காணாமல் போனார். இது அவரது உடலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து ஆஸ்திரேலிய போலீஸ் படை பஞ்சாப் வரவுள்ளதாகவும் தெரிகிறது. அவர்கள் லோரா கிராமத்தில் உள்ள ரஞ்சோத் சி்ங்கின் குடும்பத்தாரிடம் ரத்த மாதிரிகளை சேகரிக்கவுள்ளனர். இதன்மூலம் டிஎன்ஏ சோதனை நடத்தி இறந்தது ரஞ்சோத் சிங் தானா என்பது சோதனையிடப்படவுள்ளது.

கண்டெடுகப்பட்ட உடலில் சீக்கியர் அணியும் காதணி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+