ஆருசி கொலை-பெற்றோரிடம் சிபிஐ நார்கோ சோதனை

Subscribe to Oneindia Tamil

Aarushi and Rajesh Nupur Talwar
காஜியாபாத்: சிறுமி ஆருசி கொலை தொடர்பாக அவரது பெற்றோரிடம் உண்மை கண்டறியும் (நார்கோ அனாலிசிஸ்) சோதனை நடத்தப்படவுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 15ம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் ராஜேஷ்-நுபுர் தம்பதியின் மகளான 14 வயது ஆருசி வீட்டில் கழுத்து அறுபட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

அவருடன் வீட்டு வேலைக்காரரான ஹேமராஜ் என்பவரும் கொலையாகிக் கிடந்தார். இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உத்தரப் பிரதேச போலீசார் ராஜேஷ் மீது வழக்குப் பதிவு செய்தது. இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியதோடு, உண்மைக் குற்றவாளிகளை போலீசார் காப்பாற்ற முயல்வதாக புகார் எழுந்தது.

இதையடுத்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த சிபிஐ ஹேமராஜின் நண்பர்களான கிருஷ்ணா, ராஜ் குமார், விஜய் மண்டல் ஆகியோர் தான் இந்தக் கொலைகளைச் செய்ததாகக் கூறியது.

அவர்களிடம் உண்மை கண்டறியும் நார்கோ அனாலிசிஸ் சோதனையும் நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது. அதில் தாங்கள் தான் இந்தக் கொலைகளை செய்ததாக மூவரும் கூறினாலும் அதற்கான பிற ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

இதனால் சிபிஐயின் வாதத்தை நொய்டா நீதிமன்றம் தள்ளுபடி செய்து மூவரையும் ஜாமீனில் விடுவித்துவிட்டது.

இதையடுத்து இந்தக் கொலையில் ஆருசின் தந்தை ராஜேசுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறி அவரை சிபிஐ கைது செய்தது. ஆனால், அவர் மீது கொலைக்கான ஆதாரங்களை சிபிஐ தாக்கல் செய்யாததால் அவர் விடுவிக்கப்பட்டார். மேலும் இந்தக் கொலைக்கும் பெற்றோருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் சிபிஐ அறிவித்தது.

இந் நிலையில் இந்தக் கொலை வழக்கில் சிபிஐ புதிய டீம் மீண்டும் புதிதாக தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இதில் தங்களுக்கு புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், இது தொடர்பாக ராஜேஷ் மற்றும் நுபுரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் நொய்டா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சிபிஐ கோரியது.

இந்த விசாரணைக்கு தான் தயாராக இருப்பதாக ராஜேஷ் தெரிவித்துவிட்டதால் நார்கோ சோதனை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்தச் சோதனை எப்போது நடக்கும் என்று தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+