பிரபல கம்பெனிகள் பெயரில் போலி ஆயில் தயாரிப்பு
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் அருகே பிரபல கம்பெனி பெயரில் தயாரிக்கப்பட்ட 10 ஆயிரம் லிட்டர் போலி ஆயிலை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கரூர் அருகே சுக்காலியூர் பகுதியில் வாகனங்களுக்கான போலி ஆயில் தயாரிப்பு தொழிற்சாலைகள் இயங்கிவருவதாக கரூர் கலெக்டர் உமாமகேஸ்வரிக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து மாவட்ட வழங்கல் அலுவலர் வெள்ளியங்கிரி தலைமையில் சுக்காலியூரில் திடீர் ஆய்வு நடத்த உமா மகேஸ்வரி உத்தரவிட்டார்.
அப்போது, இந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான தொழிற்சாலைகளில் அதிகாரிகள் நிழைந்தனர். அதிகாரிகள் வருவதைக் கண்டதும் ஊழியர்கள் தப்பியோடினர். மேலாளராக பணி புரிந்த கதிரேசன் மட்டும் சிக்கினார்.
தொழிற்சாலைக்குள் முன்னணி நிறுவனங்களின் பெயர் ஒட்டப்பட்டிருந்த கேன்களில் நிரப்பியிருந்த நாலாயிரம் லிட்டர் ஆயில் பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications