கோட்டையில் நடக்கும் கடைசி சட்டமன்ற கூட்டம்!

வரும் மார்ச் மாதம் புதிய சட்டசபை கட்டி முடிக்கப்பட்டுவிடும் என்பதால் சட்டமன்றத்தி்ன் பட்ஜெட் கூட்டத் தொடர் அங்கு தான் நடக்கும் என்று தெரிகிறது.
இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் நாளை ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா உரையுடன் தொடங்கும் இக் கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.
குறிப்பக ஆளுநர் உரையிலேயே பல முக்கிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என்று கூறப்படுகிறது.
இது 13வது தமிழக சட்டசபையின் 12வது கூட்டத் தொடராகும்.
நாளை காலை அவை கூடியதும், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டு மறுநாள் கூடும்.
இக் கூட்டத் தொடர் ஜனவரி 12ம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதமும், பதிலுரையும் நடக்கும்.
புனித ஜார்ஜ் கோட்டையில் தலைமைச் செயலகமும், சட்டப் பேரவையும் இயங்கி வரும் நிலையில் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் நடந்து வரும் புதிய தலைமைச் செயலகம், சட்டப் பேரவையின் கட்டுமானப் பணிகள் மார்ச்சில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, வரும் நிதியாண்டுக்கான (2010-11) பட்ஜெட் புதிய சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படலாம்.
இதனால் இப்போதுள்ள சட்டசடையில் நடக்கும் கடைசி கூட்டத் தொடராக இது இருக்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications