சென்னை: நள்ளிரவில் வாகனங்களுக்கு தீ வைத்த கும்பல்
சென்னை: சென்னையில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த வாகனங்கள் நள்ளிரவில் தீவைத்து கொளுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
புளியந்தோப்பு நரசிம்மன் காலனியைச் சேர்ந்தவர் பிரசாத் (38). தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவரும் இவரது தம்பிகள் பிரேம்குமார் (36) ஐகோர்ட்டு ஊழியர், குருமூர்த்தி (34) தனியார் நிறுவன ஊழியர்.
சகோதரர்கள் 3 பேரின் வீடுகளும் ஒரே தெருவில் அருகருகே உள்ளன. வழக்கம் போல் நேற்று இரவு 3 பேரும் தங்கள் மோட்டார் பைக்குகளை வீட்டின் முன் நிறுத்தி இருந்தனர்.
நள்ளிரவு 12.30 மணி அளவில் 3 பைக்குகளுக்கும் மர்ம நபர்கள் தீவைத்து விட்டு தப்பி ஓடி விட்டனர். இந்த தீயில் பிரேம்குமார் வீட்டின் முன் இருந்த மோட்டார், வீட்டு ஜன்னல்கதவு ஆகியவையும் தீப்பிடித்து எரிந்தன.
தீப்பிடித்தை கண்டதும் அருகில் இருந்தவர்கள் வந்து தீயை அணைத்தனர். அதற்குள்ளாக பைக்குகள் மற்றும் பொருட்கள் தீயில் கருகின.
இதுகுறித்து பேசின் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த 3 மோட்டார் பைக்குகள் தவிர அங்கு நின்ற மற்ற வாகனங்களுக்கு எவ்வித சேதாரமும் இல்லை.
எனவே, முன்விரோதம் காரணமாக திட்டமிட்டு இவர்களின் பைக்குகளை தீவைத்து கொளுத்தியிருப்பதாக போலீசார் கருதுகின்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications