கோவை சிறை இப்போதைக்கு இடம் மாறாது: கனிமொழி
கோவை: செம்மொழி மாநாட்டு பூங்காவுக்காக கோவை மத்திய சிறைச்சாலையை உடனடியாக இடம் மாற்றும் திட்டம் எதுவம் இல்லை என்று செம்மொழி மாநாடு ஒருங்கிணைப்புக் குழு செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
கோவையில் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ளது. மாநாட்டுப் பூங்கா அமைப்பதற்காக கோவையில் உள்ள மத்திய சிறை வளாகம் பயன்படுத்தப்படும் என்றும், இதனால் சிறைச்சாலை வேறு இடத்துக்கு மாற்றப்படும் எனவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் கோவை வந்த செம்மொழி மாநாடு ஒருங்கிணைப்புக் குழு செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி மாநாட்டு பூங்கா அமைக்கும் திட்டம் குறித்து கூறுகையில், 'இப்போதைக்கு மத்திய சிறையை இடம் மாற்ற, எந்தத் திட்டமும் இல்லை.
அதைத் தவிர்த்து, காலியாகவுள்ள 93 ஏக்கர் பரப்பில் குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே பூங்கா அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்த கட்டமாக, சிறையை இடம் மாற்றிய பின்பு, 160 ஏக்கர் பரப்பிலும் பூங்கா அமைக்கப்படும்' என்றார்.












Click it and Unblock the Notifications