திருவையாறில் பஞ்சரத்ன கீர்த்தனை- 500 கலைஞர்கள் பாடினர்
திருவையாறு: திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனை இன்று நடைபெற்றது. 500-க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள், ஒரே நேரத்தில் தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி அஞ்சலி செலுத்தினர்.
தஞசை மாவட்டம் திருவையாறில் ஆண்டுதோறும் தியாக பிரம்ம மகோற்சவ சபை சார்பில் தியாகராஜர் ஆராதனை விழா நடைபெற்றுவருகிறது.
இந்தாண்டு ஆராதனை விழா கடந்த 2ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பஞ்சரத்ன கீர்த்தனை இன்று காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒரு மணிநேரம் தொடர்ந்து பஞ்சரத்ன கீர்த்தனைகள் இசைக்கப்பட்டது.
கர்நாடக இசை பாடகர்கள் சுதா ரகுநாதன், அனுராதா, மஹதி, சீர்காழி சிவசிதம்பரம், அரித்துவாரமங்கலம் தவில் வித்வான் ஏ.கே.பழனிவேலு உள்பட இசை கலைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பஞ்சரத்ன கீர்த்தனைகளைத் தொடர்ந்து நாதசுர இன்னிசை, பாட்டு, வயலின், மிருதங்கம், நிகழ்ச்சியும் நடந்தது. 10 நிமிடங்களுக்கு ஒரு குழுவினர் என்ற முறையில் இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று நள்ளிரவு வரை தொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
விழாவிற்கு தியாக பிரம்ம மகோற்சவ சபை தலைவர் ஜி.ஆர்.மூப்பனார், முன்னாள் எம்.எல்.ஏ. ராம்குமார் உள்பட ஏராளமான இசைப் பிரியர்கள் வந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications