வேலை-மோசடி தலைமை ஆசிரியை கைது

Subscribe to Oneindia Tamil

ஆலங்குளம்: வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ.1.25 லட்சம் மோசடி செய்த பள்ளி தலைமை ஆசிரியை கைது செய்யப்பட்டார். சப்-இன்ஸ்பெக்டர் மனைவி உள்பட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆலங்குலம் அருகே உள்ள கடங்கநேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் வேலை இல்லாமல் இருந்தார்.

இந்நிலையில் விகேபுரம் அகஸ்தியர்பட்டி சேக்கிழார் தெருவை சேர்ந்த ராஜா என்ற சொர்ணராஜா, அவரது மனைவி மேரி மரகதம், மற்றும் ராசையா மனைவி அமலி ஆகியோர் முருகன் மகனுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1.25 லட்சததை ஒரு ஆண்டுக்கு முன் வாங்கினர். ஆனால் வேலை வாங்கி தரவில்லை.

இதையடுத்து கொடுத்த பணத்தை முருகன் திரும்ப கேட்டார். பணத்தை திருப்பி கொடுக்காததால் முருகன் விகேபுரம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை நடத்தி மேரி மரகதத்தை கைது செய்தனர். அவரது கணவர் ராஜா, மற்றும் அமலி ஆகியோரை தேடி வருகின்றனர். கைதான மேரி மரகதம் ஆழ்வார்குறிச்சியிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இதே போல் அமலியின் கணவர் ராசையா விகேபுரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் பாளையங்கோட்டை ஆயுதபடைக்கு மாற்றப்பட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+