தேனி அருகே விடுதலைப் புலி கைது?
Subscribe to Oneindia Tamil

தேனி அருகே கம்பம் சோதனைச் சாவடியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஸ்ரீதரன் (32) மற்றும் அவரின் நண்பர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரித்தனர்.
மண்டபம் அகதிகள் முமாமில் தங்கியருந்த அவர்கள் இருவரும் சபரிமலைக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருப்பதாக போலீசாரிடம் கூறினர்.
அவர்களின் அடையாள அட்டையை காண்பிக்குமாறு போலீசார் கேட்டுள்ளனர். ஆனால் ஸ்ரீதரன் வைத்திருந்த அடையாள அட்டை மற்றும் பாஸ்போர்ட் போலியானவை என தெரியவந்தது.
அவரிடம் மேலும் விசாரணை நடத்தியதில், கடந்த 1992ம் ஆண்டில் யாழ்பாணத்தில் அவர்கள் போர் பயிற்சி பெற்றுள்ளதும், வல்வெட்டித்துறையில் தங்கியிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து ஸ்ரீதரன் மீது பாஸ்போர்ட் மோசடி உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications