கொழும்பு சிறையில் தமிழர்கள் மீது சிங்களர் தாக்குதல்
கொழும்பு: கொழும்பு சிறையில் சிங்களர்களால் தாக்கப்பட்ட தமிழர்கள் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்கள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை சிங்கள் கைதிகள் சிலர் ஒன்று கூடி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் படுகாயமடைந்த இரு தமிழ்க் கைதிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரே சிறைச்சாலையில் தமிழர்களும், சிங்களர்களும் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
இந்த வன்முறை காரணமாக, இரு பிரிவு கைதிகளையும் வேறு அறைகளுக்கு மாற்றியுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன. விடுதலைப் புலிகள என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சுமார் 200 தமிழர்கள் கொழும்பு சிறைச்சாலையில் தற்போது பிடித்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications