விழுப்புரம்-கலெக்டர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி
விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பெண், திடீரென தீக்குளிக்க முயன்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனுநீதி நாள் நடைப்பெற்றது. அப்போது, செஞ்சி அடுத்த சோமசமுத்திரத்தைச் சேர்ந்த விவசாயி சுப்ரமணியன் என்பவரின் மனைவி வசந்தா (48) ஒரு மனுவுடன் வந்தார்.
அலுவக வளாகத்திற்கு வந்த அவர் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொள்ள முயன்றார். இதைக்கண்டதும் டி.ஆர்.ஓ கதிரவன் உள்ளிட்ட அதிகாரிகள் ஓடிவந்து அப்பெண்ணை தடுத்தி நிறுத்தினர்.
தற்கொலைக்கான காரணம் குறித்து வசந்தா கூறுகையில், 'நாங்கள் நான்கு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். சாலையை கடந்து உள்ளே இருக்கும் இரண்டு ஏக்கர் நிலத்திற்கு பொது வழியில் செல்ல, எங்கள் ஊரைச் சேர்ந்த பழனிவேல் என்பவர் வழி விட மறுத்து வருகிறார்.
அவர் இடத்தை வேறொருவருக்கு விற்றபின்னாலும் பிரச்னை செய்துகொண்டே இருக்கிறார். கலெக்டரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கையில்லை. அதனால் தான் தற்கொலைக்கு முயன்றேன்' என்றார்.












Click it and Unblock the Notifications