செக்ஸ் அர்ச்சகர்-4 பெண்கள் ரகசிய வாக்குமூலம்
காஞ்சிபுரம்: செக்ஸ் அர்ச்சகர் தேவநாதன் மீது கற்பழிப்புப் புகார் கூறிய நான்கு பெண்களையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். நீதிபதி முன்பு ரகசிய வாக்குமூலம் அளிக்க உள்ளனர்.
காஞ்சிபுரம் மச்சேஸ்வரர் கோவில் கருவறையில் பெண்களுடன் செக்ஸ் லீலைகளில் ஈடுபட்ட அர்ச்சகர் தேவநாதன் மீதான வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். டி.எஸ்.பி. விஜயராகவன் தலைமையில் விசாரணை நடக்கிறது.
தேவநாதனுன் கோயில் கருவறையில் வைத்து பல பெண்களுடன் உல்லாசம் அனுபவித்துள்ளார். பல விஐபி வீட்டுப் பெண்களும் தேவநாதனின் வலையில் விழுந்ததாக தெரிகிறது.
பலர் தகவல்களை வெளியே சொல்லாமல் மூடி மறைத்து வரும் நிலையில் ஒரு பூக்காரப் பெண் உட்பட இதுவரை நான்கு பெண்கள் தேவநாதன் தங்களை மயக்க மருந்து கொடுத்து கோயிலில் கற்பழித்துவிட்டதாக புகார் தந்துள்ளனர்.
இந்த நான்கு பெண்களும் போலீசாரிடம் வாக்குமூலமும் அளித்துள்ளனர். இதுதொடர்பாக தேவநாதனுக்கு ஆண்மை பரிசோதனையும் நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் போலீசார் அந்த 4 பெண்களையும் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் விரைவில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். அவர்கள் நீதிபதி முன்பு ரகசிய வாக்குமூலம் அளிக்க உள்ளனர்.












Click it and Unblock the Notifications