சமாஜ்வாடி செயலாளர் பதவி-அமர்சி்ங் விலகல்

உடல் நிலையைக் காரணம் காட்டி அவர் பதவி விலகினாலும், அந்தக் கட்சிக்கும் காங்கிரசுக்கும் இடையே கூட்டணி ஏற்பட வசதியாகவே அவர் விலகியதாகத் தெரிகிறது.
தொழில் துறையினர், சினிமா துறையினருக்கு மிக நெருக்கமான அமர்சிங்கைக் கண்டாலே காங்கிரஸ் தலைமைக்கு ஆகாது. அவரை சோனியா காந்தி முடிந்தவரை ஒதுக்கியே வைத்தார்.
இதனால் தான் காங்கிரஸ்-சமாஜ்வாடி இடையே நல்லுறவு உருவாவதில் சிக்கல் நிலவி வந்தது.
இந் நிலையில் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் மிக நெருங்கிய நண்பரான அமர்சிங் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து திடீரென விலகியுள்ளார்.
டாக்டர்கள் அறிவுறுத்தியதால் பதவி விலகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். அதே நேரத்தில் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் நீடிப்பேன் என்றார்.
கல்யாண் சிங் மீண்டும் புது கட்சி:
இந் நிலையில் உத்தரப் பிரதேச முன்னாள் பாஜக முதல்வரும் பாபர் மசூதி இடிப்பில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவருமான கல்யாண் சிங் நேற்று தனது 78வது பிறந்த நாளில் மீண்டும் ஒரு கட்சியைத் தொடங்கினார்.
கட்சிக்கு ஜன் கிராந்தி பார்ட்டி (ஜே.கே.பி.) என்று பெயரிடப்பட்டுள்ளது. குர்மி சமூகத்தைச் சேர்ந்த இவர் அவர்களது வாக்குகளை குறி வைத்து இந்தக் கட்சியை துவக்கியுள்ளார்.
கல்யாண் சிங் கட்சி தொடங்குவது இது 2வது முறையாகும். 1999ம் ஆண்டு பாஜகவிலிருந்து விலகி ராஷ்டிரீய கிராந்தி பார்ட்டி' (ஆர்.கே.பி.) என்ற கட்சியைத் தொடங்கினார். 2004ல் அந்த கட்சியை கலைத்தார்.
மீண்டும் பாஜகவில் இணைய தீவிரமாக முயன்றார். ஆனால், அந்த முயற்சிகள் பயனளிக்கவில்லை. இந் நிலையில் மீண்டும் கட்சி தொடங்கியுள்ளார்.












Click it and Unblock the Notifications