மிஸ்டு கால்கள்.. கவனமாய் இருங்கள்-ஏர்டெல்
சென்னை: சந்தேகப்படும்படி வரும் மிஸ்டு கால்கள் குறித்து வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்குமாறு ஏர்டெல் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
சமீபகாலமாக +92 என தொடங்கும் சில எண்களில் இருந்து பொதுமக்களின் செல்போன்களுக்கு மிஸ்டு கால்கள் வருகின்றன. அந்த எண்களை மீண்டும் தொடர்பு கொண்டால் எதிர்முனையில் பேசுவோர், தாங்கள் செல்போன் நிறுவன பிரதிநிதிகள் என்று கூறுகிறார்கள்.
மேலும் அந்த நபருக்கு ஆன்லைன்-மொபைல் லாட்டரியில் பல லட்சம பரிசு விழுந்துள்ளதாகவும், அதைப் பெற்றுக் கொள்ள ஒரு தொகையை கட்டுமாறும் கூறுகின்றனர். மேலும் அவர்களிடம் வங்கிக் கணக்கின் விவரங்கள், சுய விவரங்களையும் கேட்டுப் பெறுகின்றனர்.
இவ்வாறு வரும் அழைப்புகளையோ, எஸ்எம்எஸ்களையோ செல்போன் மற்றும் லேண்ட்லைன் பயனாளிகள் நம்ப வேண்டாம் என ஏர்டெல் நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் இவ்வாறு வரும் அழைப்பாளர்களிடம் பொதுமக்கள் தங்கள் வங்கி கணக்கு குறித்த விவரங்கள் எதையும் தெரிவித்துவிட வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications