ஹேமலதா கற்பழிப்பு புகார்-போலீசாரிடம் ஸ்ரீகுமார் மறுப்பு

Subscribe to Oneindia Tamil

Eswarakumar Swamiji and Hemalatha
சென்னை: எனக்கும், இன்னொரு நபருக்கும் வேளச்சேரியில் உள்ள எனது நிலம் சம்பந்தமான வழக்கு நடந்து வந்ததை அறிந்து அவர்களது ஆதரவோடு என் மீது ஹேமலதா அபாண்டமாக கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளார் என்று சென்னை சாமியார் ஈஸ்வர் ஸ்ரீகுமார் போலீசாரிடம் கூறியுள்ளார்.

நுங்கம்பாக்கம் காம்தார்நகரை சேர்ந்தவர் இவர் மீது ஹேமலதா என்ற பெண் கற்பழிப்பு புகார் கொடுத்ததைடுத்து தலைமறைவான சாமியார் பெங்களூரில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.

நேற்றிரவு சென்னை கொண்டு வரப்பட்ட அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, நான் எந்தத் தவறும் செய்யவில்லை, என் சொத்துக்களை அபகரிக்க எதிரிகள் செய்கிற சூழ்ச்சி இது என்று கூறியுள்ளார்.

அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில்,

3 வருடங்களுக்கு முன் எனது மனைவிக்கு மசாஜ் செய்ய ஹேமலதா தியாகராய நகரில் நான் குடியிருந்த வீட்டிற்கு வந்தார். அப்போது என்னிடம் டிரைவராக இருந்த சரவணன் ர்தான் அவரை அழைத்து வந்தார்.

ஆனால், அவருக்கு மசாஜ் செய்யத் தெரியாததால் அவரை வர வேண்டாம் என்று கூறிவிட்டோம்.

பின்னர் நான் உடல் வலியால் அவதிப்பட்டபோது எனக்கு மசாஜ் செய்வதற்காக அழைத்தேன். 6 முறை என் வீட்டுக்கு வந்து செய்து விட்டார். மற்றப்படி அவருடன் செக்ஸ் உறவு ஏதும் வைத்துக் கொள்ளவில்லை.

இதற்கிடையே திருட்டில் ஈடுபட்டதால் டிரைவர் சரவணனை வேலையைவிட்டு நிறுத்தினேன். ஹேமலதாவுக்கும், சரவணனுக்கும் இடையே உறவு இருந்துள்ளது. அதனால் அவனுக்கு ஆதரவாக ஹேமலதா என்னிடம் பேசினார். நான் அவரது சிபாரிசை ஏற்கவில்லை.

இதனால் இருவரும் என் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர்.
இந் நிலையில் எனக்கும், இன்னொரு நபருக்கும் வேளச்சேரியில் உள்ள எனது நிலம் சம்பந்தமான வழக்கு நடந்து வந்ததை அறிந்து அவர்களது ஆதரவோடு என்மீது அபாண்டமாக கற்பழிப்பு புகார் கொடுத்துள்ளார் ஹேமலதா.

இடையே பலமுறை என்னிடம் பணம் கேட்டு சரவணனும் ஹேமலதாவும் மிரட்டினர். இறுதியாக கற்பழிப்பு புகாரைத் தந்துள்ளனர் என்று கூறியுள்ளார் சாமியார்..

இந் நிலையில் ஸ்ரீகுமாருக்கு மருத்துவ பரிசோதனை நடத்த போலீசார் நடவடிக்கை எடு்த்து வருகின்றனர்.

இந்நிலையில் ஹேமலதா புகாரில் கூறி உள்ளபடி அவரது ஆபாச சிடி அல்லது புகைப்படம் ஏதாவது சாமியார் வீட்டில் உள்ளதா என்றும் போலீசர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+