பிளஸ்டூ மாணவியுடன் தலைமை ஆசிரியர் ஒட்டம்
சென்னை: டியூஷன் படிக்க வந்த பிளஸ்டூ மாணவியுடன் பள்ளி தலைமை ஆசிரியர் தலைமறைவானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோரும், தலைமை ஆசிரியரின் மனைவியும் தனித்தனியே போலீசாரிடம் புகார் செய்துள்ளனர்.
சென்னை, கொடுங்கையூரில் உள்ள டான்பாஸ்கோ மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் அமலன். வயது 45. அவரின் மனைவி சகாய மேரியும் அதே பள்ளியில் ஆசிரியையாக உள்ளார்.
வியாசர்பாடி எம்.கே.பி. நகரைச் சேர்ந்த ராமன் என்ற ஆட்டோ டிரைவரின் மகள் சந்தியாவும் இதே பள்ளியில் பிளஸ்டூ படித்து வந்தார்.
பிளஸ்டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற சிறப்பு பயிற்தி அளிப்பதாகக் கூறி சந்தியாவை தன் வீட்டிற்கு அழைத்தார் தலைமை ஆசிரியர் அமலன். இதன்படி கடந்த 3 மாதமாக அமலனிடம் டியூஷன் படித்து வந்தார் சந்தியா.
இந்நிலையில் நேற்று டியூஷன் சென்ற சந்தியா திரும்பி வரவில்லை. இரவு 10 மணிக்கு அமலன் வீட்டிற்கு சென்று கேட்டபோது, அமலனின் மனைவி சகாய மேரி மட்டுமே வீட்டில் இருந்தார்.
சந்தியா ஏற்கனவே வீட்டுக்கு போவதாகக் கூறிசென்றுவிட்டார் எனக் கூறவே பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பல இடங்களிலும் தேடிய சமயத்தில் சந்தியாவின் பெற்றோருக்கு அமலன் ஃபோன் செய்துள்ளார்.
'சந்தியாவும் நானும் காதலிக்கிறோம். திருமணம் செய்துகொள்ளப்போகிறோம். உங்களுக்கு பிரச்னை இல்லை என்றால் அண்ணாநகர் ரவுண்டானாவுக்கு வாங்க. பேசுவோம்' எனக் கூறியுள்ளார்.
ஆனால் சந்தியாவின் பெற்றோர் அண்ணாநகர் சென்றுபார்த்தபோது அங்கு யாரும் இல்லை. இதனால் போலீசில் புகார் கொடுத்தனர்.
இதற்கிடையே, அமலனின் மனைவி சகாயமேரி தனது கணவரை காணவில்லை என இன்று காலை புகார் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications