அரசு பஸ் மோதி ஐயப்ப பக்தர்கள் இருவர் பலி-7 காயம்

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: நெடுஞ்சாலையில் 'பிரேக் டவுன்' ஆன காரில் இருந்து கீழே இறங்கி நின்றுகொண்டிருந்த ஐயப்ப பக்தர்கள் மீது அரசு மோதியதில் இருவர் உயிரிழந்தனர்.

சென்னை செனாய் நகர் அப்பாவு கார்டன் பகுதியைச் சேர்ந்த குணசேகர் (30) சந்தோஷ் நகர் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி (51) ஆகியோர் எழும்பூரில் உள்ள ஒரு ஹோட்டலில் வேலை பார்த்து வந்தனர்.

குணசேகரனும், முத்துசாமியும் தனது உறவினர்களுடன் ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்து காரில் சபரிமலைக்கு சென்றனர்.

சபரிமலையில் இருந்து சென்னைக்கு காரில் திரும்பிக்கொண்டு இருந்தனர். இன்று அதிகாலை அய்யப்ப பக்தர்கள் வந்த கார் செங்கல்பட்டு அடுத்த மாமண்டூர் பாலாற்று மேம்பாலத்தில் திடீரென பழுதாகி நின்றது. குணசேகர், முத்துசாமி ஆகியோர் காரின் அருகே நின்று கொண்டு இருந்தனர்.

அப்போது நெய்வேலியில் இருந்து சென்னை நோக்கி வந்த அரசு பஸ் கார் மீது மோதியது. இதில் முத்துசாமி, குணசேகரன், கோவிந்தராஜன் ஆகிய 3 பேர் 50 அடி பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டனர்.

முத்துசாமி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். குணசேகரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கோவிந்தசாமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த விபத்தில் கோவிந்தராஜனின் மகள் பூஜா (6), ராமமூர்த்தி, அவரது மகள் கஜலட்சுமி (7), ஸ்ரீதர், ஹேமகுமார், செந்தில்குமார் ஆகியோரும் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+