சொத்துக்காக தாயை கொன்ற கல்லூரி மாணவன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெற்ற தாயை சரமாரியாக கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு தலைமறைவான கல்லூரி மாணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை நங்கநல்லூரை சேர்ந்த சீனிவாசன் கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி லலிதா சமூக நல துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

இவர்களின் மகன் பாலாஜி குமார் பி.காம் படித்து வருகிறார். பாலாஜிகுமாருக்கும், அவரது தாய்க்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது.

இதனால், கடந்த 5ஆண்டுகளாக பாலாஜி பெற்றோருடன் வசிக்காமல், தனியாக கே.கே.நகரில் உள்ள மற்றொரு சொந்த வீட்டில் இருக்கிறார்.

இந்நிலையில் நேற்று லலிதாவின் தந்தை நினைவு நாளையொட்டி, கே.கே. நகர் வீட்டில் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பாலாஜி குமாருக்கும், லலிதாவுக்கும் இடையே சொத்தை பிரிப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியபோது, ஆத்திரம் அடந்த பாலாஜி குமார், தனது தாய் லலிதாவை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். லலிதா அங்கேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+