ஆஸி பயணம்: இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

ஆனால், இந்த பயண எச்சரிக்கையை ஆஸ்திரேலிய அரசு நிராகரித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் இதுவரை இந்தியர்கள் தாக்கப்பட்டு தான் வந்தனர். இந் நிலையில் இந்தியர்கள் கொலையாக ஆரம்பித்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் இரு இந்திய இளைஞர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இதையடுத்து இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதில், ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்களும், அந் நாட்டுக்குச் செல்லும் இந்தியர்களும் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும், இரவில் தனியே வெளியே செல்ல வேணாடம், ஏதாவது ஆபத்து நேர்ந்தால் உடனடியாக 000 என்ற எண்ணில் போலீசாரை தொடர்பு கொள்ளுமாறும் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக மெல்போர்ன் நகரில் கூடுதல் பாதுகாப்புடன் இருக்குமாறு கூறப்பட்டுள்ளது.
ஆஸி நிராகரிப்பு:
ஆனால், இந்தியாவின் இந்த பயண எச்சரிக்கை தேவையற்றது என்று ஆஸ்திரேலியா துணைப் பிரதமர் ஜூலியா கில்லர்ட் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,
இதுபோன்ற வன்முறைகள் உலகெங்கும் பெரிய நகர்களில் நடப்பது சகஜமானது தான். இது மெல்போர்னில் நடக்கிறது, மும்பையில் நடக்கிறது, நியூயார்க்கில் நடக்கிறது, லண்டனில் நடக்கிறது.
இந்த பயண எச்சரிக்கை ஒரு பக்கம் இருந்தாலும் இந்திய மாணவர்களை ஆஸ்திரேலிய அரசு தொடர்ந்து வரவேற்கும் என்றார்.












Click it and Unblock the Notifications