மன அழுத்த நோயாளியாகிவிட்ட ராஜபக்சே!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றோம் என்று கூறிக் கொண்டாலும், மகிந்த ராஜபக்சே கடும் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு, தனது மாளிகையை விட்டு வெளிவரமுடியாமல் தவிக்கிறாராம்.

தூக்கமின்றி, மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு வரும் அவரை ஏராளமான மருத்துவ ஆலோசகர்கள் சோதித்து வருகின்றனர். தொடர்ச்சியாக ஓய்வில் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் வெளியிலே போய் ஓட்டுக் கேட்க முடியாததால், அவரது எதிர் வேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு கூடுவதாக வரும் செய்திகள் அவரது நிம்மதியை மேலும் சீர்குலைத்து விட்டன.

இன்னொரு பக்கம் தமிழர் அமைப்புகளில் பெரும்பாலானவை பொன்சேகாவை ஆதரிக்கின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பும் பொன்சேகாவுக்கு ஆதரவு தந்துவிட்டதால், மகிந்தவின் கவலை பலமடங்கு அதிகரித்துள்ளது.

இதனால் தொடர்ந்து தூக்கம் வராமல் தவிக்கிறாராம் ராஜபக்சே. அவருடைய ஜோசியர்கள் வேறு, வெளியில் சென்றால் கண்டம் என்று கூறிவிட்டதால், பெருமாபாலான பொழுதுகளை அலரி மாளிகையிலேயே கழிக்கிறாராம்.

ராஜபக்சேக்கு நிர்வாகம் மற்றும் ராணுவ ஆலோசனை சொல்ல 200 ஆலோசகர்கள் உள்ளார்களாம். இப்போது மருத்துவ ஆலோசனை கூற மேலும் 50 பேர் சேர்ந்துள்ளார்களாம்.

இன்னும் சிறிது காலத்துக்கு மகிந்த வெளியிலேயே செல்லக் கூடாது முநழு ஓய்வு தேவை... என்று அவர்கள் ஆலோசனை கூறியுள்ளார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+