வங்கியில் மாஜி எம்எல்ஏவின் 120 பவுன் நகை மாயம்!
நெல்லை: வங்கி லாக்கரில் வைத்திருந்த ரூ.12 லட்சம் மதிப்புள்ள நகை மாயமானதாக முன்னாள் எம்.எல்.ஏ போலீசில் புகார் அளித்துள்ளார்.
பாளையங்கோட்டை பெல் காலனியை சேர்ந்தவர் வக்கீல் கிருஷ்ணன். வாசுதேவநல்லூர் முன்னாள் எம்.எல்.ஏ.வான இவர் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ஒரு வங்கி லாக்கரில் கடந்த மூன்று மாதத்திற்கு முன் 120 பவுன் நகை வைத்திருந்தார்.
நேற்று உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக கிருஷ்ணன் லாக்கரில் வைத்திருந்த நகையை எடுப்பதற்காக வங்கிக்கு சென்றார்.
லாக்கரை திறந்து பார்த்தபோது அதில் வைக்கப்பட்டிருந்த அவரது நகையை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.12 லட்சமாகும்.
இதுகுறித்து அவர் வங்கி மேலாளர், மற்றும் ஜங்ஷன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். வங்கி ஊழியர்களுக்கு தெரியாமல் எப்படி நகை மாயமானது என்பது குறித்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications