சிங்கப்பூர்... 'கிரேட் எஸ்கேப்'!

Subscribe to Oneindia Tamil

Singapore
சிங்கப்பூர்: ஒரு நாடாகக் கூட கணக்கில் கொள்ள முடியாத, உற்பத்திக்குத் தேவையான வளங்கள் ஏதுமற்ற மிகச் சிறிய இடப்பரப்பு கொண்ட சிங்கப்பூர், பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவையே அண்ணாந்து பார்க்க வைக்கக் கூடியதாக இருந்தது... 2007 வரை.

2008-2009-ல் உலகப் பொருளாதாரத்தின் மீது விழுந்த அடி, சிங்கப்பூருக்கும் கடும் வலியைக் கொடுத்தது.

ஆசியாவில் பொருளாதார மந்தம் என்ற நிலைமை முதல் முதலாக உணரப்பட்டதே சர்வதேச சந்தையான சிங்கப்பூரில்தான். லேஹ்மன் பிரதர்ஸ் வீழ்ந்ததும், 2008ன் மூன்றாவது காலாண்டில் அதிகாரப்பூர்வமாக வீழ்ச்சியை அறிவித்த முதல் நாடும் சிங்கப்பூர்தான். அதற்கடுத்த இரு காலாண்டுகள் மட்டும் தடுமாறிய சிங்கப்பூர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு, 2009ல் நிதிச் சலுகைகளை அறிவித்தது, 20.5 மில்லியன் சிங்கப்பூர் டாலர் அளவுக்கு.

பொருளாதாரம் சற்று தாக்குப் பிடிக்கும் நிலை வந்தபோது, பன்றிக் காய்ச்சல் பயம் சிங்கப்பூர் முழுவதையும் பீடித்தது. சுற்றுலா, போக்குவரத்து மற்றும் தொழிலாளர் துறை கடுமையான பாதிப்புக்கு ஆளானது.

ஆனால் சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சென் லூங்கின் (Lee Hsien Loong) தொலைநோக்கு கணிப்பும் வழிநடத்தலும் பொருளாதார சரிவை சரியாகக் கையாள உதவியது.

2009-2010ல் 5 சதவீதம் அளவு பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என பிரதமர் லீ கணித்திருந்தார். அதற்கேற்ப நிதிச் சலுகைகள் மற்றும் திட்டமிடலை மேற்கொண்டனர். அதன் விளைவு எதிர்பார்த்ததை விட குறைவாக வீழ்ச்சியையே சிங்கப்பூர் சந்தித்தது. 2.1 சதவீகித பொருளாதார சரிவு ஏற்பட்டாலும் அதைச் சமாளித்து மீண்டும் உற்பத்தியை சரியான ட்ராக்குக்கு கொண்டு வந்தது.

2009ன் இறுதி காலாண்டில் நஷ்டம் வரும் என்றும், மொத்த உற்பத்தி சுருங்கிவிடும் என்றும் சிங்கப்பூர் பொருளாதார நிபுணர்கள் கூறிவந்த போது, சத்தமின்றி 3.5 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது அந்நாட்டின் ஜிடிபி எனப்படும் மொத்த உற்பத்தி.

உற்பத்தித் துறையை விட, பணிகள் துறையில் எதிர்பாராத வகையில் மீட்சி ஏற்பட்டுள்ளதாக சிங்கப்பூரின் டிபிஎஸ் வங்கி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ கூறுகையில், "இது ஒரு பாதுகாப்பான நிலை. கிட்டத்தட்ட ஒரு Equilibrium Point மாதிரி. எந்த அளவு வீழ்ச்சி வரும் என்று எதிர்பார்த்தோமோ, அதே அளவு இன்று வளர்ச்சி அடையும் என்று சொல்லும் அளவு ஆரோக்கியமாக உள்ளது சிங்கப்பூர் பொருளாதாரம்.

வீழ்ச்சிக் காலத்தில் அதை முதலில் சொன்ன நாடு சிங்கப்பூர்தான். அதே போல மீட்சியின் போதும் அதை முதலில் உணர்ந்து சொன்ன நாடு சிங்கப்பூர்தான்!" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+