இலங்கையில் அவசரகால நிலை மீண்டும் நீட்டிப்பு
கொழும்பு: இலங்கையில் அவசரகால அமலில் உள்ள அவசரகால சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துவரும் நிலையில், எமர்ஜென்சியை நீட்டித்து இலங்கை நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இலங்கையில் கடந்த 2005ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலைக்கு பின்னர் அவசரபால சட்டம் மீண்டும் அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு அதை திரும்பப்பெறும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு வழங்கப்பட்டது.
இதனால், ஒவ்வொரு மாதமும் நாடாளுமன்றத்தில் அவசரகால சட்டம் நீட்டிக்கப்பட்டு வருகிறது.
தற்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்துள்ள நிலையில் இந்த எமர்ஜென்சி சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளது.
வரும் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக போட்டியிடும் முன்னாள் ராணுவ தளபதி சரத்ஃபொன்சேகா, தான் ஆட்சிக்கு வந்தால் இச்சட்டத்தை ரத்து செய்வேன் என வாக்குறுதி அளித்துள்ளார்.
இந்நிலையில், இந்த எமர்ஜென்சி நிலையை நீட்டித்து இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
போர் முடிந்தாலும், விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்படும் நபர்கள் இன்னும் ஏராளமாக இருப்பதாகவும், இவ்வேளையில் இதுபோன்ற சட்டம் அமலில் இருப்பது தான் நல்லது என்றும் அரசு தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications