பூஜை நீரில் மயக்க மருந்து-கல்லூரி மாணவி கற்பழிப்பு

Subscribe to Oneindia Tamil

போபால்: திருமண தோஷத்தை போக்குவதாகக் கூறி பூஜை தண்ணீரில் மயக்க மருந்து கொடுத்து கல்லூரி மாணவியை கற்பழித்த டாக்டர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பர்கத்துல்லா பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி எம்.ஃபில் படித்து வருபவர் சோனா (26).

இவருக்கு பிரதீப் மோரே என்பவர் அறிமுகம் ஆனார். சோனாவுக்கு திருமண தோஷம் இருப்பதாகவும், மந்திராவாதி ஒருவரிடம் அழைத்துச்சென்று சரி செய்வதாகவும் மோரே கூறியுள்ளார்.

இதை நம்பிய சோனா, மோரே அழைத்ததன் பேரில் போபாலில் உள்ள ரகுராஜ் பாண்டே என்ற டாக்டரின் மருத்துவமனைக்கு சென்றார்.

மருத்துவமனை அறையிலேயே மந்திரவாதி ஒருவரை வரவழைத்து பூஜைகள் தொடங்கப்பட்டுள்ளது. மந்திரவாதி எனக் கூறிக்கொண்டு வந்த ஏமாற்றுப் பேர்வழி தண்ணீரில் மயக்க மருந்தை கலந்து சோனாவை குடிக்க வைத்துள்ளான்.

சோனா மயங்கியதும், மூன்று பேரும் கற்பழித்துள்ளனர். சோனாவை மயக்க நிலையில் வைத்து ஒரு நாள் முழுக்க அவர்கள் வெறித்தனத்தில் ஈடுபட்டுள்ளனர். அரை குறை மயக்கத்தில் சோனாவை சினிமா தியேட்டருக்கும் அழைத்து சென்றுள்ளனர்.

இதற்கிடையே சோனாவை காணவில்லை என்று விடுதியில் தேடிக்கொண்டிருந்தனர். தியேட்டரில் இருந்தபடியே சோனா விடுதி வார்டனுக்கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் கொடுத்தார்.

இதுபற்றி வார்டன் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் தியேட்டருக்கு விரைந்து சென்று சோனாவை மீட்டனர். டாக்டர் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+