சென்னைக்கு கிருஷ்ணா நீர்-ஆந்திராவுக்கு தமிழகம் கடிதம்

Subscribe to Oneindia Tamil

Krishna River
சென்னை: கிருஷ்ணா ஆற்றிலிருந்து மீண்டும் சென்னைக்கு நீரை திறந்து விடுமாறு ஆந்திர அரசுக்கு தமிழகம் கடிதம் எழுதியுள்ளது.

வட கிழக்கு பருவ மழை முடிந்து விட்ட நிலையில் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் முழுமையாக நிரம்பவில்லை. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது தற்போது ஏரிகளில் தண்ணீர் இருப்பு குறைவாகவே உள்ளது.

பூண்டி ஏரியில் கடந்த ஆண்டு இதே நாளில் 3,012 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது. ஆனால் தற்போது 2,116 மில்லியன் கன அடி தண்ணீர்தான் உள்ளது.

புழல் ஏரியில் இப்போது 2,129 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு 2,847 மில்லியன் கன அடி இருந்தது. சோழவரம் ஏரியில் கடந்த வருடம் 853 மில்லியன் கன அடி இருந்தது. தற்போது 705 மில்லியன் கன அடியே உள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் 2,465 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 2,946 மில்லியன் கன அடி இருந்தது. அதே போல வீராணத்தில் தற்போது 806 மில்லியன் கன அடி உள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.

இப்போது ஏரிகளில் உள்ள நீர் ஆகஸ்ட் மாதம் வரை சென்னை நகருக்கு சப்ளை செய்ய போதுமானதாக இருக்கும். அதன் பிறகு சிரமமே.

இதனால் மீண்டும் கிருஷ்ணா ஆற்றிலிருந்து சென்னைக்கு நீரை திறந்து விட வேண்டும் என்று ஆந்திர அரசுக்கு, தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 15ம் தேதி தமிழகத்தின் கோரிக்கையை ஏற்று ஆந்திர அரசு கண்டலேறு அணையிலிருந்து 4.145 டிஎம்.சி நீரைத் திறந்து விட்டது.

ஒப்பந்தப்படி ஆந்திரம் ஆண்டு தோறும் தமிழகத்துக்கு 12 டி.எம்.சி. நீரைத் தர வேண்டும். எனவே மீண்டும் மிச்சம் தரப்பட வேண்டிய கிருஷ்ணா தண்ணீரை திறந்து விடுமாறு தமிழகம் கோரியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+