ஆஸ்திரேலியாவில் கல்வி-அடியோடு குறைந்தது மவுசு

ஆஸ்திரேலியாவுக்குப் படிக்கச் செல்ல விரும்பி மாணவர் விசா கோரி விண்ணப்பித்துள்ள இந்திய மாணவர்களின் எண்ணிக்கையில் இந்த ஆண்டு 46 சதவீதம் குறைந்துள்ளதாக ஆஸ்திரேலியா குடியுரிமைத் துறை தெரிவித்துள்ளது.
மேலும், சர்வதேச அளவில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையிலும் 20 சதவீதம் குறைந்துள்ளதாம்.
ஆஸ்திரேலியா குடியுரிமை துறை செய்தித் தொடர்பாளர் சன்டி லோகன் கூறுகையில், மாணவர் விசா குறைந்ததற்கு இனவெறித் தாக்குதல்கள், வன்முறை ஆகியவை மட்டுமே காரணம் என்று கூறி விட முடியாது.
விண்ணப்பங்கள் முன்பு போல இல்லாமல் தற்போது மிகவும் துல்லியமாக பரிசீலிக்கப்படுகின்றன. பல்வேறு விதிமுறைகள் இறுக்கப்பட்டுள்ளன. இதுவும் கூட குறைவுக்குக் காரணம். மேலும், இந்தியாலிருந்து விசா கோரி விண்ணப்பித்த பலரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதும் ஒரு காரணம் என்று சால்ஜாப்பாக பேசினார்.
அதேசமயம், மாணவர் விசா கோரி விண்ணப்பித்திருந்த பல இந்தியர்கள் தங்களது விண்ணப்பங்களைத் திரும்பப் பெற்றுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள் மற்றும் இந்திய மாணவர்கள் மீது தொடர்ந்து இனவெறித் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த சில நாட்களில் மட்டும் 2 இந்தியர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவமும் இந்தியர்களை அதிர வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications