கூட்டுறவு வங்கியில் மோசடி: ஊழியர்கள் கைது
கோவை: வேலை செய்த வங்கியிலேயே பல லட்சம் மோசடி செய்த ஊழியர்களை போலீசார் கைது செய்தனர்.
கோவை கரியாகவுண்டனூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியின் செயலாளராக அன்னூர் ஜீவா நகரைச் சேர்ந்த எம்.எஸ்.சண்முகமும், உறுப்பினராக தங்கராஜும் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த வங்கியில் நகை இல்லாமலேயே கடன் கொடுக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, வங்கி உயர் அதிகாரி ரவீந்திரன் இந்த வங்கியில் திடீர் தணிக்கை செய்தார்.
அப்போது, நகை இல்லாமலேயே பலருக்கு நகைக் கடன் கொடுத்துள்ளதாக கணக்கு காட்டி ரூ.15 லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து உயர் அதிகாரி ரவீந்திரன் கொடுத்த புகாரை தொடர்ந்து வங்கி செயலார் சண்முகம் பணி நீக்கம் செய்யப்பட்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கி செயலாளராக பதவி வகித்த எம்.எஸ். சண்முகம் மற்றும் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர் தங்கராஜ் ஆகியோரை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications