வெடிபொருள்-மதுரை தொழிலதிபரிடம் சிபிஐ விசாரணை

Subscribe to Oneindia Tamil

மதுரை: காரைக்காலில் உரத் தொழிற்சாலையில் வைத்து வெடிபொருள் தயாரித்து பல கோடி மோசடி செய்த மதுரை தொழிலதிபரிடம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்கிப் பிடி விசாரணை நடத்தினர்.

காரைக்காலில் உள்ள காரை கெமிக்கல்ஸ் மற்றும் வைகை கெமிக்கல்ஸ் உரத் தொழிற்சாலையின் இயக்குநராகவும் தொழிலதிபர் நீதிமோகன் உள்ளார்.

உரம் தயாரிக்கப் பயன்படும் பொட்டாசியம் குளோரைடிலிருந்து பொட்டாசியம் குளேரேட் என்னும் மூலப்பொருளை எடுத்து விதிமுறைகளை மீறி வெடிபொருள்களைத் தயாரிக்க இவர் பயன்படுத்தி வந்து அதன் மூலம் பலகோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேல்விசாரணைக்காக நீதிமோகனை சிபிஐ அதிகாரிகள் புதுச்சேரிக்கு அழைத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலைகளில் கடந்த பல ஆண்டுகளாக உரங்கள் தயாரிக்கப் பயன்படும் பொட்டாசியம் குளோரைடிலிருந்து கொண்டு பொட்டாசியம் குளோரேட் என்னும் மூலப்பொருளை பிரித்து எடுத்து, வெடி உப்பு மற்றும் பாறையை உடைக்கப் பயன்படும் டெட்டனேட்டர் குச்சிகள் விதிகளை மீறி, தயாரிக்கப்பட்டு வருவதாகவும், பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் புதுச்சேரி அதிமுக புகார் கூறியது.

இதைடடுத்து போலீஸார் விசாரணை நடத்தினர். இரு நிறுவனங்களும் மூடி சீல் வைக்கபப்ட்டன. பின்னர் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. நான்கு மாதங்களுக்கு முன்பு இந்த வழக்கு சிபிஐ வசம் மாற்றப்பட்டது.

நிறுவனங்களின் இயக்குநரான தொழிலதிபரிடம் விசாரணை மேற்கொள்ள சிபிஐ இன்ஸ்பெக்டர்கள் சந்தோஷ்குமார், தண்டபாணி, ராஜேந்திரன் அடங்கிய குழு புதன்கிழமை மதுரை வந்தது. அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+