ரேஷன் கடைகளில் 'பொங்கல் பை'-காய்கறிகள்!
சென்னை: ரேசன் கடைகளில் பொங்கலுக்குத் தேவையான மளிகை பொருட்கள் ரூ.50க்கும், காய்கறிகள் ரூ.25க்கும் விற்பனை செய்யப்பட உள்ளன.
சென்னை திருவல்லிக்கேணி கூட்டுறவு பண்டகசாலை (டி.யூ.சி.எஸ்.) இந்தியாவில் உள்ள மிகப்பழமையான கூட்டுறவு பண்டக சாலை ஆகும். இங்கு ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி குறைந்த விலையில் பொங்கலுக்கு தேவையான மளிகை பொருட்களை விற்பனை செய்யப்படுகின்றன.
அதேபோல இந்த ஆண்டும் பொங்கல் பை விற்பனை செய்யப்படுகிறது.
இந்த பொங்கல் பையில் பொன்னி பச்சரி 1.5 கிலோ, உருண்டை வெல்லம் 400 கிராம், பாசிப்பயிறு 100 கிராம், முந்திரி, திராட்சை, ஏலம் 20 கிராம், உதயம் நெய் 15 மில்லி ஆகிய 7 பொருட்கள் இருக்கும். மார்க்கெட்டில் இதன் மதிப்பு ரூ.75 முதல் 80 வரை ஆகும். ஆனால், இங்கு இதன் விலை ரூ.50 ஆகும்.
ஜனவரி 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை 5 நாட்கள் டி.யூ.சி.எஸ். ரேஷன் கடைகளிலும், அதன் சுயசேவை பிரிவு மையங்களிலும் மண்ணெண்ணை விற்பனைக்கூடங்களிலும் இந்த பொங்கல் பைகள் விற்கப்படும்.
பொங்கல் காய்கறிகள்:
இந்த ஆண்டு முதல்முறையாக இங்கு பொங்கல் காய்கறிகளையும் விற்பனை செய்ய உள்ளனர். இதில், கத்திரிக்காய் வாழைக்காய், கருணைக்கிழங்கு, சேப்பக்கிழங்கு, பரங்கிக்காய், பூசணி, அவரைக்காய், மச்சக்காய், நெல்லிக்காய் என 12 விதமான பொங்கல் காய்கறிகள் இடம்பெற்றிருக்கும்.
ஒன்றே கால் கிலோ எடை கொண்ட இந்த பொங்கல் காய்கறி பையின் விலை ரூ.25 ஆக இருக்கும்.
பொங்கல் காய்கறிகள் 13, 14ம் தேதிகளில் விற்பனைக்கு வரும்.












Click it and Unblock the Notifications