பென்னாகரம்: பொது வேட்பாளர்-தா.பாண்டியன் யோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: பென்னாகரம் இடைத்தேர்தலில் அதிமுகவும், பாமகவும் கலந்துபேசி பொதுவான எதிர்க்கட்சி வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர் கூறுகையில், பென்னாகரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அதிமுக வேட்பாளரை ஆதரிப்பது என முடிவு முடிவு செய்துள்ளது.

ஆளும் கட்சியை எதிர்க்கும் முறையாக எதிர்க்கட்சிகள் ஒன்றுக்கொன்று உதவி செய்வது காலத்தின் கட்டாயம். இடைத்தேர்தலில் ஆளும் கட்சி பலத்தையும், அதிகாரத்தையும் பயன்படுத்துவதால் அதை எதிர்கொள்ள அதிமுகவுக்கு உதவி அவசியமாகிறது. ஆகவே, அதிமுகவுக்கு ஆதரவு தருகிறோம்.

பென்னாகரம் இடைத்தேர்தலில் பாமக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர்களும் சேர்ந்து எதிர்க்கட்சி சார்பில் ஒரு வேட்பாளரை நிறுத்த முன்வந்தால் நல்லது. அதை அங்கு போட்டியிடுகின்ற அதிமுகவும், பாமகவும் சேர்ந்து பேசி முடிவு செய்ய வேண்டும்.

கட்சியின் மாநில அலுவலக கட்டிடத்திற்காக மார்ச் 2வது வாரத்தில் இருந்து பொதுமக்களை சந்தித்து நிதி ரூ.5 கோடி நிதி திரட்ட முடிவு செய்துள்ளோம்.

இலங்கை தமிழர்கள் இன்னும் சித்ரவதை முகாம்களில் இருக்கிறார்கள். முகாம்களில் இல்லாத தமிழர்கள், அங்கு வாழ முடியாமல் தஞ்சம் தேடி தமிழ்நாட்டுக்கும், பிற நாடுகளுக்கும் சென்று கொண்டிருக்கிறார்கள்' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+