கற்பழிப்பு சாமியார்-வன விலங்குகள் சட்டத்தில் கைது!!

சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகரைச் சேர்ந்த சாமியார் ஈஸ்வர ஸ்ரீகுமார், ஹேமலதா என்ற பெண்ணை கற்பழித்து ஆபாச படம் எடுத்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனால், இந்தக் கைதை அதிகாரப்பூர்வமாக போலீசார் காட்டவில்லை. இதனால் இவரிடம் நேற்று முன்தினம் முதல் நேற்று இரவு வரை நீலாங்கரை அடுத்த பனையூரில் உள்ள போலீஸ் உயர் அதிகாரி ஒருவரின் பண்ணை வீட்டில் வைத்து ரகசிய விசாரணை நடத்தப்பட்டது.
சாமியாரின் நுங்கம்பாக்கம் வீட்டில் சோதனையும் நடத்தப்பட்டது. அப்போது ஒரு சிறுத்தையின் தோல் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ஈஸ்வரகுமார் மீது வனவிலங்கு வேட்டையாடுதல் தடுப்பு சட்டம் 42, 43 ஆகிய இரு பிரிவின் கீழ் புதிதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த சிறுத்தை தோலை பதுக்கிய குற்றத்திற்காக அவரை கைது செய்வதாக போலீசார் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு அறிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அவரை சைதாப்பேட்டை 17வது நீதிமன்ற மாஜிஸ்திரேட்டின் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் நள்ளிரவில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந் நிலையில் கற்பழிப்பு வழக்கு தொடர்பாக சாமியாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தவும் போலீசார் நீதிமன்றத்தில் அனுமதி கோரவுள்ளனர்.
இந் நிலையில் தனது வீட்டில் கைப்பற்றப்பட்ட சிறுத்தை தோல் தென்னாப்பிரிக்காவில் ஆன்மீக சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது ஒரு சிஷ்யர் தந்தது என்று கூறியுள்ளார் சாமியார்.
மத்திய அரசுக்கு விளக்கம்:
ஈஸ்வர ஸ்ரீகுமார் மத்திய அரசின் ஆலோசனை குழு உறுப்பினராக உள்ளதால் அவர் மீதான வழக்கு விவரங்களை மத்திய அரசு கோரியுள்ளது.
இதைடுத்து சாமியார் மீதான புகார், வழக்குகள் ஆகியவை அடங்கிய விவரங்கள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications