தோசையில் பூச்சி மருந்து-சாப்பிட்ட 2 பேர் பலி!
Subscribe to Oneindia Tamil
நாகப்பட்டினம்: பூச்சிக் கொல்லி மருந்தை எண்ணெய் என நினைத்து அதை பயன்படுத்தி தோசை தயாரித்து சாப்பிட்ட 2 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
நாகப்பட்டினம் மாவட்டம் கலியாபட்டினத்தைச் சேர்ந்தவர் முத்துச்சாமி (60). ராஜேஸ்வரி, ராமாமிர்தம், மாரிமுத்து உள்ளிட்ட 4 குழந்தைகள் உள்ளனர்.
முத்துச்சாமி வேலைக்கு சென்றிருந்த நிலையில் இரவு 8 மணியளவில் சாப்பிடுவதற்காக தோசை சுட்டனர். அப்போது, இவர்கள் எண்ணெய்க்குப் பதிலாக 'எண்டோசல்ஃபான்' என்ற பூச்சிக் கொல்லி மருந்தை தவறுதலாக பயன்படுத்தியதாக தெரிகிறது.
இந்த தோசையை சாப்பிட்ட ராஜேஸ்வரி மற்றும் மாரிமுத்து அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மற்ற இருவரும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications