கோவை நீதிமன்றத்தில் நாஞ்சில் சம்பத் சரண்

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழக முதல்வர் கருணாநிதியை அவதூறாக பேசிய வழக்கில் ம.தி.மு.க கொள்கை விளக்க செயலாளர் நாஞ்சில் சம்பத் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள மருதூரில் கடந்த 2006ம் ஆண்டு நடந்த ம.தி.மு.க பொதுக்கூட்டத்தி்ல் நாஞ்சில்சம்பத் காரசாரமாக பேசினார்.

அப்போது, தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதியை குறிப்பிட்டு அவதூறாக பேசியதாக நாஞ்சில்சம்பத் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கோவை மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் கடந்த டிசம்பர் மாதம் 29 ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நாஞ்சில் சம்பத் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதனையடுத்து அவருக்கு நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டார்.

இந்நிலையில், நீதிபதி முன்னிலையில் நாஞ்சில் சம்பத் சரண் அடைந்தார். பின்னர் அவர் சார்பாக பிடிவாரண்டை ரத்து செய்யக்கோரி ம.தி.மு.க வக்கீல்கள் கே.என்.பொன்னுசாமி, ரவிக்குமார், ராஜேந்திரன், சிவபார்த்த சாரதி ஆகியோர் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து, அவர் மீதான பிடிவாரண்டு ரத்து செய்யப்பட்டது. பின்பு இந்த வழக்கு வருகிற 28ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+