கண்டிப்பாக புதிய அணையை கட்டுவோம்-கேரளாம்
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்: முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவது உறுதி, அது நனவாகும் என்று கேரளாக திமிராக பேசியுள்ளது.
இதுகுறித்து இன்று திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பிரேமச்சந்திரன், புதிய அணை என்பது நனவாகக் கூடிய ஒரு விஷயம்தான்.
எங்கு அணை கட்டலாம் என்பது குறித்து ஆய்வுக் குழு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
குறிப்பிட்ட இடத்தை விரைவில் அவர்கள் அடையாளம் கண்டு முடிப்பார்கள். அது முடி்நதவுடன், இதுதொடர்பான அறிக்கை மாநில அரசின் நீர்ப்பாசன வடிவமைப்புப் பிரிவுக்கு அனுப்பப்படும். இந்தப் பணிகள் அனைத்தும் 2 மாதங்களில் முடியும் என எதிர்பார்க்கிறோம்.
நிச்சயம் புதிய அணை கட்டப்படும். அது உறுதி என்றார் பிரேமச்சந்திரன்.












Click it and Unblock the Notifications