அடுத்த 6 மாதங்களுக்கு வட்டி உயராது!

விரைவில் தனது இறுதி காலாண்டு நிதி கொள்கையை அறிவிக்கவுள்ளது ரிசர்வ் வங்கி.
இதில், பணவீக்கத்தை தொடர்ந்து கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கான தனது திட்டங்களை அறிவிக்கப் போகிறது.
இதையொட்டி அனைத்து வங்கிகளும் கடன்களுக்கான வட்டிகளை உயர்த்தும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது வேறுமாதிரி செய்திகள் வெளியாகின்றன.
பணவீக்கம் காரணமாக பொதுத் துறை வங்கிகளுக்கு பாதிப்பு இருந்தாலும், கையிருப்பில் உள்ள வைப்புத் தொகையின் அளவு கணிசமாக உள்ளதால், அதை அதிக அளவு கடன்களாகத் தரவேண்டியுள்ளன வங்கிகள். இந்த நிலையில் வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் கடன் வழங்கலில் பாதிப்பு ஏற்படும் என்பதாலேயே இந்த முடிவாம்.
இதனால், வரும் ஜூன் மாதம் வரை, கடன்களுக்கான வட்டி வீதத்தை பொதுத் துறை வங்கிகள் உயர்த்தாது என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, பாரத ஸ்டேட் வங்கி தலைவர் ஒ.பி.பட் கூறுகையில்,'வங்கியில் டிபாசிட்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால், பணவீக்கத்தால் நிதி நெருக்கடி இருந்தாலும், அது பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தாது. இன்னும் அடுத்த ஆறு மாதங்களுக்கு கடன்களுக்கான வட்டி வீதம் அதிகரிக்க வாய்ப்பு இல்லை' என்றார்.












Click it and Unblock the Notifications