தமிழ் எழுத்துக்களில் மீண்டும் சீர்திருத்தம்!

தமிழ் எழுத்து சீர்திருத்தம் தொடர்பான பரிந்துரைகளையம் திட்டங்களையும் இந்தக் கமிட்டி தீட்டி வருகிறது. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் இது குறித்து அறிவிக்கப்படக் கூடும்.
தமிழ் எழுத்துக்களில் சீர்திருத்தம் செய்யப்படுவது இது முதல் முறையல்ல.
ஆரம்ப காலத்தில் தமிழ் எழுத்துக்கள் வட்டெழுத்துக்களாகவே இருந்தன. இவை பனை ஓலைகளில் எழுதப்பட்டு வந்தன.
18வது நூற்றாண்டில் இத்தாலிய பாதிரியாரான கான்ஸ்டான்ட் ஜோசப் பெஸ்கி (வீரமாமுனிவர்) வட்டெழுத்துக்களில் சீர்திருத்தங்கள் செய்து அவற்றை அச்சிடுவதற்கேற்ற முறையில் மாற்றினார்.
பின்னர் 50களில் தந்தை பெரியார் மேலும் சில சீர்திருத்தங்களைச் செய்தார். இவற்றை 1977ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர். அங்கீகரித்து அமல்படுத்தினார். இதன் மூலம் டைப் செய்யும் வகையில் தமிழ் எழுத்துக்கள் மாறின. இந்தத் தமிழ் எழுத்துக்கள்தான் இன்று வரை நடைமுறையில் உள்ளன.
தற்போது கம்ப்யூட்டர் காலம் என்பதால் கம்ப்யூட்டர்களில் எளிய முறையில் தமிழை இடமாற்றம் செய்ய வசதியாக புதிய சீர்திருத்தங்களை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு பரிந்துரைக்கவுள்ளது.












Click it and Unblock the Notifications