செக்ஸ் டார்ச்சர்-பொய் புகார் தந்த ஆசிரியை சஸ்பெண்ட்
நெல்லை: கல்வித்துறை தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக பொய் புகார் அளித்த ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிபவர் உமா மகேஸ்வரி. இவர் ஈட்டிய விடுப்பு எடுப்பதற்காக உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
விண்ணப்பத்தில் தவறு இருந்ததால் அலுவலக எழுத்தர் அதனை திருப்பி பெற்றுக் கொள்ளுமாறு ஆசிரியையிடம் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த உமா மகேஸ்வரி விண்ணப்பத்தை பிடுங்கி கிழித்துவீசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் உமா மகேஸ்வரி நெல்லை சந்திப்பு போலீசில் உதவி தொடக்க கல்வி அலுவலர் தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்யாததால் நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி போலீசார் விசாரணை நடத்துமாறு அறிவுறுத்தினர். அதன் பேரில் நெல்லை சந்திப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் செக்ஸ் டார்ச்சர் புகார் பெய்யானது என தெரிய வந்தது. இதனால், ஆசிரியை உமா மகேஸ்வரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட தொடக்க கல்வி அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
அதன்படி ஆசிரியை உமா மகேஸ்வரியை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மாரியப்பன் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications