கடையநல்லூர் தொழிலாளி துபாயில் மர்ம சாவு
Subscribe to Oneindia Tamil
கடையநல்லூர்: கடையநல்லூரை சேர்ந்த தொழிலாளி துபாயில் மர்மமான முறையில் இறந்தார்.
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மிட்டா ஆபிஸ் தெருவை சேர்ந்தவர் முத்துசாமி. இவர் கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி மற்றும் குழந்தைகள் கடையநல்லூரில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் முத்துசாமி திடீரென மர்மமான முறையில் இறந்து வி்ட்டார். இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு அவருடன் துபாயில் பணிபுரியும் நண்பர்கள் தகவல தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்ட முத்துசாமியின் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மனைவி மற்றும் குழந்தைகள் கதறி அழுதபடி இருக்கின்றனர். முத்துசாமி உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications