ரூ.1 கோடியை நெருங்கும் பழநி உண்டியல் வசூல்
பழநி: திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவில் உண்டியல் வசூல் 15 நாட்களில் ஒரு கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் புகழ் பற்ற கோவில்களில் ஒன்று பழநி முருகன் கோவில். முருகனின் ஆறு படை வீடுகளில் ஒன்று.
இந்தக் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டு, மலைக்கோவில் கார்த்திகை மண்டபத்தில் எண்ணப்பட்டது.
உண்டியல் திறப்பில் ரொக்கம் ரூ.75 லட்சம் இருந்தது. மேலும், தங்கத்தால் ஆன வேல், நாணயம், திருமாங்கல்யம், மோதிரம், கைக்கடிகார செயின், காவடி, வெள்ளி வேல், பாதம், செங்கோல், டம்ளர் போன்றவைகள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.
மேலும், அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், கத்தார், ஓமன், யூரோ நாட்டுக் கரன்சிகளும் காணிக்கையாக கிடைத்தது.
பித்தளையால் ஆன மணி, வேல், பாத்திரங்கள் மற்றும் கைக்கடிகாரம், பரிவட்டம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.
உண்டியல் எண்ணிக்கை இன்றும் நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் உண்டியல் எண்ணிக்கையையும் சேர்த்து, 15 நாள் உண்டியல் வசூல் ரூ. 1 கோடியை தாண்டும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications