புயல் சின்னம் எதிரொலி - தமிழகத்தில் 2 நாட்கள் மழை பெய்யும்
சென்னை: வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை அதே இடத்தில் இருப்பதால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் 2 நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில்,
தமிழகம் மற்றும் ஆந்திராவை ஒட்டி உள்ள வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால், தமிழகம் மற்றும் புதுவையின் கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களில் சனிக்கிழமை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் உள்புற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் நேற்று முழுவதும் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இந்த திடீல் சாரலால் வெளியில் சென்ற மக்கள் அவஸ்தைக்குள்ளாகினர்.
மழை பெய்யத் தொடங்கியுள்ள போதிலும் பனியும் விடவில்லை. இப்படி இரு பக்கத் தாக்குதலால் பல்வேறு காய்ச்சல்களால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்கள் மேலும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications