713 முன்னாள் விடுதலைப் புலிகள் நாளை விடுதலை

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: மறு வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி வீரர்கள் 713 பேர் நாளை விடுதலை செய்யப்படுவர் என்று இலங்கை ராணுவம் அறிவித்துள்ளது.

வவுனியாவில் உள்ள புனர்வாழ்வு முகாம்களில் இவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் உதய நாணயக்காரா கூறுகையில், இவர்கள் அனைவரும் நாளை முகாமிலிருந்து விடுதலை செய்யப்படுவர்.

இவர்கள் மீது பெரிய அளவிலான குற்றச்சாட்டுக்கள் இல்லை. சிறு சிறு குற்றங்களில்தான் இவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.

இந்த குழுவினருடன் சிறார் வீரர்களும் கூட இடம் பெற்றுள்ளனர் என்றார்.

உண்மையில் இந்த 713 பேரும் விடுதலைப் புலிகள் அமைப்பில் தீவிரமாக செயல்பட்டவர்கள் அல்ல. விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில்தான் இவர்களை ராணுவம் கைது செய்து, மறுவாழ்வு என்ற பெயரில் அடைத்து வைத்திருந்தது.

சமீபத்தில் இவர்களை விசாரணை செய்ய அனுமதிக்குமாறு கோரி ராணுவம் கொழும்பு கோர்ட்டை அணுகியது. ஆனால் அனைவரும் சந்தேகத்தின் பேரில்தான் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறும்போது அவர்களை மீண்டும் மீண்டும் விசாரிக்கத் தேவையில்லை. விடுதலை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து நாளை அனைவரும் விடுவிக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+