பிப்ரவரி 26ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல்?
டெல்லி: வழக்கத்தை விட 2 நாட்களுக்கு முன்னதாக பிப்ரவரி 26ம் தேதியே மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
டெல்லியில் இன்று தனது இல்லத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி மதிய விருந்தளித்துக் கெளரவித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடையே சாதாரண முறையில் பேசியபோது, இதை சூசகமாக தெரிவித்தார்.
வழக்கமாக பொது பட்ஜெட் பிப்ரவரி 28ம் தேதிதான் தாக்கலாகும். ஆனால் இந்த ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி மீலாடி நபி, அரசு விடுமுறை தினமாக வருகிறது. 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமையாகும். எனவே பிப்ரவரி 26ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.
விரைவில் பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும் தேதியை மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து முடிவெடுக்கும்.
இந்த பட்ஜெட், 2வது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் 2வது பட்ஜெட் ஆகும். கடந்த ஜூலை மாதம் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் முதல் பட்ஜெட்டை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தாக்கல் செய்தது.
நாட்டின் பொருளாதார நிலை குறித்து பிரணாப் முகர்ஜி கூறுகையில், பொதுவாக பொருளாதாரம் நன்றாகவே உள்ளது. நல்ல அறிகுறிகள் காணப்படுகின்றன என்றார்.












Click it and Unblock the Notifications