பிரபாகரன் தந்தை வேலுப்பிள்ளைக்கு ஆயிரக்கணக்கான தமிழர்கள் கண்ணீர் அஞ்சலி

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. சிவாஜி லிங்கத்திடம் வேலுப்பிள்ளையின் உடல் நேற்று ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடலைப் பெற்றுக் கொண்டு நேற்று மாலை வவுனியாவுக்குக் கொண்டு சென்றார்.
பின்னர் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித்துறையில் உள்ள நீருவில் சதுக்கத்தில் வேலுப்பிள்ளை உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று காலை வைக்கப்பட்டது.
அவரது உடலுக்கு பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு வந்து மரியாதையும், அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.
பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளும் ராணுவக் காவலிலிருந்து விடுவிக்கப்பட்டிருப்பதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வேலுப்பிள்ளையின் உடல் தகனம் நாளை நடைபெறுகிறது. அவரது உடல் ஊரணி மைதானத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு நாளை முற்பகல் உடல் தகனம் நடைபெறும்.
தனது தந்தையாரின் உடலை சிவாஜிலிங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கனடாவில் உள்ள வேலுப்பிள்ளையின் மகள் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications