சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கொலை- கைதான 3 பேரும் சிறையில் அடைப்பு
அம்பாசமுத்திரம்: சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கடையம் எஸ்.ஐ. சிவசுப்பிரமணியனின் மைத்துனர் உள்ளிட்ட 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
கடையம் எஸ்.ஐ. சிவசுப்பிரமணியனுக்கு வைக்கப்பட்ட குறியில் சிக்கி அநியாயமாக கொல்லப்பட்டு விட்டார் ஆழ்வார்குறிச்சி எஸ்.ஐ. வெற்றிவேல்.
இந்தக் கொலை வழக்கில் சிவசுப்பிரமணியனின் மைத்துனர் கந்தசாமி, உறவினர்களான ஓய்வு பெற்ற எஸ்.ஐ. சண்முக சுந்தரம், கள்ளபிரான் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இன்று மூன்று பேரும் அம்பாசமுத்திரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை வருகிற 22ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் கனகவள்ளி உத்தரவிட்டார்.
இதையடுத்து மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சபாநாயகர் - அமைச்சர் ஆறுதல்..
இதற்கிடையே, கொல்லப்பட்ட வெற்றிவேலின் வீட்டிற்கு இன்று சபாநாயகர் ஆவுடையப்பன், வெற்றிவேல் நடு ரோட்டில் துடித்துக் கொண்டிருந்தபோது சம்பவ இடத்தில் இருந்த அமைச்சர் மைதீன்கான் ஆகியோர் சென்றனர்.
வெற்றிவேலின் மனைவி பிரேமா, குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினர்.
இந்தத் தகவல் அறிந்து வெற்றிவேல் வீட்டின் முன்பு மக்கள் கூடத் தொடங்கினர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. இருப்பினும் பிரச்சினை ஏதும் எழுவதற்குள் பாதுகாப்பாக சபாநாயகரும், அமைச்சரும் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications